×

கோவை அருகே மின் கம்பியில் சிக்கி இரண்டு மயில்கள் உயிரிழப்பு: பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!

கோவை: கோவையில் மின் கம்பியில் சிக்கி இரண்டு மயில்கள் உயிரிழந்தது. கோவையில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக கூட்டம் கூட்டமாக விளை நிலங்களிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை புரிகின்றன. இந்நிலையில் மாநகரின் முக்கிய பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஏராளமான அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் உள்ளது. அதனை சுற்றி காலி இடங்களும் உள்ளது. இங்கு ஏராளமாக மயில்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இந்நிலையில் அவை மின் கம்பிகளில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் அவ்வப் போது நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் சிக்கி இரண்டு மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த இரண்டு மயில்களையும் எடுத்துச் சென்றனர். தேசிய பறவையான மயில்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

The post கோவை அருகே மின் கம்பியில் சிக்கி இரண்டு மயில்கள் உயிரிழப்பு: பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை…! appeared first on Dinakaran.

Tags : Khova ,
× RELATED எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை,...